ஆர்டிஓ, டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் ஆகிய பதவிகளில் 90 காலியிடங்களை நேரடியாக நிரப்புவதற்காக குருப்-1 தேர்வு வரும் 13ம் தேதி நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குருப்-1 பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் 13-ம் தேதி காலை நடைபெற உள்ளது. இத்தேர்வெழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒடிஆர் வாயிலாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.